மின்சாரம் தாக்கிய நபரொருவர் வைத்தியசாலையில்

திருகோணமலை - அநுராதபுரம் சந்தையில் தனியார் கட்டடம் ஒன்றில் வைத்து வயோதிபரொருவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(06) இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கட்டடங்களுக்குப் பூச்சி பூசும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நிலையில் அவர் இன்று வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. 

சம்பவத்தில் திருகோணமலை - கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த (54 வயது) நபரொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
புதியது பழையவை