மட்டக்களப்பில்-ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பெண் ஒருவரின் உறவினர் கோவிட்டால் வீட்டில் உயிரிழப்பு

மட்டக்களப்பு - களுவங்கேணி மாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் ஒருவரின் அம்மம்மா கோவிட் தொற்றால் இன்று (21) வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

வந்தாறுமூலை மேற்கு கிராம சேவகர் பிரிவில் மாரியம்மன் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள களுவங்கேணி மாரியம்மன் ஆலய திருவிழா கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
புதியது பழையவை