இறுதி யுத்தத்தின் போது தமிழர்களுக்காக அனுப்பிய கடிதங்களால் பதவியிழந்த மங்கள சமரவீர

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோவிட் தொற்று காரணமாக இன்று(24) காலமானார், அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில் செவ்வியொன்று வழங்கும் போது தெரிவித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில், "மங்கள சமரவீர அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு போதும் பாகுபாட்டைக் காட்டியதில்லை. அவர் தமிழ் மக்களுக்கு சரியான விதத்தில் நீதி எட்டப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டவர். அவர் தாராளவாத சிந்தனைகளை பின்பற்றியவர்.

யுத்த காலத்தை எடுத்துக் கொண்டால், 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகிய போது இவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் போர் முடிவுக்கு வருகின்ற தருவாயில் 'நீங்கள் போரை முடிவுக்கு கொண்டுவருவது அவசியமாக இருந்தாலும் நீங்கள் அதனை கையாளும் முறையில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை' என ஜனாதிபதிக்கு இரண்டு கடிதங்கள்  அனுப்பியிருந்தார்.

இதன் காரணமாக அவருடைய அமைச்சுப் பதவியினை இழந்திருந்தார். இவ்வாறாக பற்பல சந்தர்ப்பங்களில் அவர் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவர் என்பதை நாம் கண்டுகொண்டுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை