மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை இன்று முதல் சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் மற்றும் பி. சி.ஆர் பரிசோதனைகளின் போது பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சில மரணங்களும் சம்பவித்துள்ளன.
மாநகர சபையில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் பகுதியில் பி சி .ஆர் மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சில அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .