திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் அனாவசியமாக வீதிகளில் நடமாடியவர்களுக்கு இன்று (24)அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 152 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் தலைமையில் பிரதேசசெயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் உதவிப்பிரதேசசெயலாளர் மு.சதிசேகரன் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்போடு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தவதற்காக சுகாதாரத்துறை மற்றும் பிரதேச செயலகம் பாதுகாப்பு தரப்பினர் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை