இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் தனது வாகனத்தில் நேற்று விறகு சேகரிக்கச் சென்ற சமயத்திலேயே, குளவிக் கொட்டிற்கு இலக்காகியுள்ளார்.
உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் பவிக்குமார் (வயது 31) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.