பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை – மஹாவெல, கவுடுபெலல்ல பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த, மாத்தளை குருகஸ்பிட்டியவை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது லொறி ஒன்றும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை