உரம் இறக்குமதிக்கான தடை தொடரும்


இரசாயன உரம் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருந்ததாக வௌியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சேதன பசளை பயன்பாடு என அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இரசாயன உரம் இறக்குமதி தடை திட்டத்தில் மாற்றம் இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கத்தின் அனுமதியுடன் சேதன பசளை தயாரிக்க பயன்படும் நைட்ரிஜன் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்களை இறக்குமதி செய்ய முடியும் என அவர் கூறினார்.
புதியது பழையவை