நாட்டின் பல பகுதிகளில் இருந்து நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகைதருபவர்கள் தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.