மட்டக்களப்பு வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள எரிக்கம்கட்டு பாலத்துக்கு அருகாமையில் சட்டவிரோதமாக நள்ளிரவில் பெக்கோ இயந்திரம் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை நேற்று சனிக்கிழமை (07) நள்ளிரவில் கைது செய்துள்ளதுடன் பெக்கோ இயந்திரம் மற்றும் கனரகவானம் ஆகியவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்ட சிரேஷட்ட காவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கவிற்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தலைமையிலான காவற்துறையினர் கொண்ட குழுவினர் குறித்த பகுதிக்கு சம்பவதினதான நேற்று நள்ளிரவு சென்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பெக்கோ இயந்திர சாரதி மற்று கனரகவான சாரதி உட்பட இருவரையும் கைது செய்தனர்.