போரதீவுப்பற்று பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளி பிரதேசத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான (28) வயதுடைய தருமரெத்தினம் தர்மதாஷ் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று 08-08-2021 அதிகாலை சடலமாக மிட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்டநாள் குடும்பப் பிரச்சனை காரணமாக வீட்டில் அனைவரும் நித்திரை செய்த பின்னர் வீடடு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை