மட்டக்களப்பில்-டயர் வெடித்து லொரி விபத்து


வேகமாக பயணித்த லொரி ஒன்றின் டயர் வெடித்ததில் அந்த லொரி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பிரதான வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை - இறக்காமம் பகுதியில் இருந்து குறுநாகல் - குளியாப்பிட்டிய பகுதிக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற லொரியின் டயர் வெடித்தே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சன நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் உயிராபத்தின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன.

டயர் வெடித்த லொரி வீதியோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோத முற்பட்ட போது அதன் சாரதி காணி ஒன்றில் லொரியை செலுத்தியுள்ளார்.

லொரியில் பயணித்த சாரதியும், நடத்துனரும் எவ்வித காயங்களின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

விபத்துக்குள்ளான லொரியின் கீழ்ப்பகுதி பாரிய சேதமடைந்துள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை