மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்குமான இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைகள் இன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் 30 வயது முதல் 40 வயது மற்றும் 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எனச் சகல வயதினருக்கும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.