மட்டக்களப்பு - வெல்லாவெளி மாணவி பொறியியல் பீட (Civil Engineering) இறுதியாண்டில் சாதனை

மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட (Civil Engineering) இறுதியாண்டில் கல்வி பயின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியினைச் சேர்ந்த செல்வி. நிஷாங்கனி- கௌரிகாந்தன் எனும் மாணவி 125 மாணவர்களுக்கிடையில் இறுதியாண்டுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் (Batch top) பெற்றுள்ளார்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயிலும் இப் பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு மாணவி ஒருவர் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இவர் ஆரம்பக் கல்வியினை மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும், இடைநிலை, உயர்தரக் கல்வியினை மட்/மட்/வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரியிலும் பயின்றவராவார்.

 ஆசிரியர்களான கௌரிகாந்தன், சரஸ்வதிதேவி ஆகியோரின் புதல்வி ஆவார்.
புதியது பழையவை