இலங்கையில் 18 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (02) அறிவித்தார்.
இந்த தடுப்பூசி திட்டம் மாவட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
18 - 30 வயதுக்குட்பட்ட 3.7 மில்லியன் பேருக்கு இந்த தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வயதுக் குழுவில் உள்ள முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 18 - 30 வயதுக்குட்பட்ட சில அத்தியாவசிய சேவைகளில் இணைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டது.
இதே வேளை, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்னும் மூன்று வாரங்களுக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்படும், அதே நேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒக்டோபர் இறுதிக்குள் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
எந்த தடுப்பூசியை எடுத்தாலும் அது சிறந்த தடுப்பூசி என்ற உண்மையை கருத்தில் கொண்டு முழு இலங்கையரும் தடுப்பூசியை பெற வேண்டும் என சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்.