மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் விவசாய காணியிலிருந்து கைக் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.
இன்று (02)பிற்பகல் குறித்த காணியின் உரிமையாளர் காணியை விவசாய செய்கைக்காக தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தபோது போலீத்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் இருந்து கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மூன்று கைக்குண்டுகள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைக்குண்டுகள் வைக்கப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.