மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், இன்று (21) (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திராவின் தலைமையில், பெரியகல்லாறு, செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் பெரியகல்லாறிலுள்ள அருளானந்தர் வித்தியாலயம், உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதில், பெருமளவான இளைஞர் மற்றும் யுவதிகள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.