உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது இயங்கும் உள்ளாட்சி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் முடிவடைகின்றது.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நிதி உட்பட ஏனைய விடயங்களில் தாக்கம் செலுத்துகின்றது.
இதனாலேயே பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு ஆராய்ந்துவருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.
