நாட்டில் 73 வீதமானவர்கள் உயர்தர வகுப்புக்கு தகுதி

கொரோனா பரவல் சிக்கல் நிலைமைக்கு மத்தியில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையினை நடாத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி பயனளித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

2020 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதரண தரபரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 53 மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதன்படி சுமார் 73. 63 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர். பாடசாலை ரீதியாகவும் தனிப் பரீட்சார்த்திகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அழகியல் பாட பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் சிற மாற்றங்கள் ஏற்படக்கூடும். எவ்வாறாயினும் இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

கல்விப்பொதுத்தராதர சாதரண தரபரீட்சை என்பது போட்டியல்ல. அது ஒரு மதிப்பீட்டு பரீட்சையாகும். கொரோனா பரவல் சிக்கல் நிலைமைக்கு மத்தியில் பரீட்சையினை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு மேற்கொண்ட முயற்சி பயனளித்துள்ளது.
புதியது பழையவை