அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 76 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் இருந்து கட்டார் நோக்கி அனுப்பப்பட்ட குறித்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று(13) அதிகாலை 2.15 அளவில் நாட்டிற்கு  கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி சுமார் 475  கிலோகிராம் நிறையுடைய தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனிடையே ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம்   கொள்வனவு செய்யப்பட்ட   மேலும்  1 லட்சத்து 20 ஆயிரம்  ஸ்புட்னிக் வீ   தடுப்பூசிகள்  உட்பட  40 லட்சம்  சைனோபார்ம்  தடுப்பூசிகள் இந்தவாரம்  நாட்டிற்கு  கொண்டுவரப்படவுள்ளதாக   அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர்  தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார்.
 
