தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இணைய முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திலின எஸ்.விஜயதுங்க விடுத்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள 011 - 2623623 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கோவிட் தொற்றின் தீவிர நிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி இரவு பத்து மணிக்கு அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
புதியது பழையவை