ஹப்புத்தளை - தொட்டலாகலை பகுதியில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே திடீரென கலைந்த வந்த குளவிகள் தாக்கியுள்ளன.
இதனையடுத்து காயமடைந்த 12 தொழிலாளர்களும் ஹப்புத்தளை வைத்தியசாலையிலும், 2 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
