நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்களை இரண்டு நாட்களுக்கு திறப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் செயற்திட்டங்களுக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நடவடிக்கைகளின் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு தபால் தலைமையகம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.