திருகோணமலையில் அமெரிக்க உற்பத்தி துப்பாக்கி மீட்பு

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட சொட்கன் என்றழைக்கப்படும் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ரொட்டவெவ - எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சுனில் சாந்தகே தமித் பியசாந்த (29 வயது) என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த குறித்த துப்பாக்கி தொடர்பில் அவரின் மனைவியே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும், குடும்பத்தகராறு காரணமாக மனைவி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதியது பழையவை