ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

மொரட்டுவை, எகொடஉயன காவற்துறை பிரிவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்கேதநபரிடமிருந்து 5.200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளின் பின்னர் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த எகொடஉயன காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதியது பழையவை