மட்டக்களப்பு- ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு அரசடி பிள்ளையார் ஆலயத்தின் மீது நேற்று இரவு வீசிய காற்றினால் மரத்தின் பாரிய கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆலயத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆலய மூலஸ்தானத்தின் பின் உள்ள அரச மரத்தின் பாரிய கிளையே இவ்வாறு காற்றினால் ஆலயத்தின் மீது வீழ்ந்துள்ளதாக பொது மக்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
ஆலய மூலஸ்தானம் முற்றாகப்பாதிக்கப்டுள்ளதுடன், ஆலயத்தின் கட்டிடச் சுவர்களிலும் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.



