நாட்டில் கடந்த 9 மாதகாலப்பகுதியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 102 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சுமார் 39 தசம் 8 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தமாக 4 ஆயிரத்து 828 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி குறித்த மாவட்டத்தில் 2 ஆயிரத்து 994 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.