பாடசாலை மீள திறக்கப்படுவது தொடர்பில் நாளை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளது கவனம் திரும்பியுள்ள நிலையில் , நாளைய தினத்தில் பாடசாலைகளை மீளத்திறப்பது பற்றி மக்களைத் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கட்டம் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதுடன் இதற்கான பரிந்துரையும் வழிகாட்டலும் அடங்கிய அறிக்கை கடந்த வாரம் கல்வி அமைச்சிடம் சுகாதார அமைச்சு கையளித்திருந்தது.

இந்த நிலையில் நாளை கல்வி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விசேட அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதியது பழையவை