கிழக்கில் ஆரம்பமானது முப்படைகளின் போர்ப் பயிற்சி

சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நீர்க்காகப் போர்ப் பயிற்சி இம்முறை 11ஆவது வருடமாகவும் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வெளிநாட்டுத் துருப்புக்களின் பங்குபற்றல் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்ற நீர்க்காகப் போர்ப்பயிற்சி இம்முறையும் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

கொரோனா தொற்று காரணமாக இம்முறை இடம்பெற்றுவரும் பயிற்சிகளில் வெளிநாட்டுப் படையினர் உள்ளீர்க்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவிக்கின்றது. மட்டக்களப்பு தொப்பிகலை நரகமுல்ல பிரதேசத்தில் இம்முறை பயிற்சிகள் நடத்தப்படுவதோடு எதிர்வரும் 29ஆம் திகதி வரை இப்பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளன.

எனினும் போர்ப் பயிற்சியின் கண்காணிப்பிற்காக வெளிநாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் இதில் பங்குபற்றியுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற பயிற்சிகளில் 04 உலங்கு வானூர்த்திகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா விமானப்படை தெரிவிக்கின்றது.

29ஆம் திகதிவரை நடைபெறும் தொடர்ச்சியான பயிற்சிகளில் தரை, கடல்சார்ந்த போர்ப் புதிய உத்திகளுடன் சேர்ந்த பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவிக்கின்றது.
புதியது பழையவை