ஐக்கிய மக்கள் சக்தியினால் பொத்துவில் தள வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஜன சுவய” திட்டத்துக்கமைய, பொத்துவில் தள வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் 28 ஆவது கட்டமாக குறித்த உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சுமார் 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 12 இலட்சத்து 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான High Flow Oxygen Unit இயந்திரம், 6 இலட்சம் பெறுமதியான 5 Function ICU Bed மற்றும் 12 இலட்சம் ரூபா பெறுமதியான Defibrillator இயந்திரம் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி தொகுதி அமைப்பாளர் ஹசன் அலி, இணை அமைப்பாளர் கயான் தர்ஷன, லகுகலை பிரதேச சபை உறுப்பினர் பாட்டலி ரோஹண கயந்த, லகுகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சந்திரசேன உள்ளிட்ட பல்ர் கலந்துகொண்டிருந்தன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதரவாளர்கள் ஆகியோரினால் “ஜன சுவய” திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை