மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் தடுப்பூசி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதுடன் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் முதலாவது தடுப்பூசியைப்பெற்றுக்கொண்ட 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.
மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நேற்றைய தினம் கர்ப்பிணிப்பெண்களும்,விசேட தேவையுடையவர்களும் விசேடமாக தங்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டதுடன் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டனர்.