பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் வலியுறுத்தவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
சிறைச்சாலைக்கு சென்ற அவர்கள் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்திருந்தனர்.
இதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசம் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரச தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட முன்வர வேண்டும் என சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
