அவுஸ்திரேலியாவில் பாரிய நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் Melbourne நகரில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

விக்டோரியாவின் Mansfield அருகில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை Sydney, Canberra மற்றும் Tasmania ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
சுமார் 20 நிமிடங்கள் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அவுஸ்திரேலிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில் Melbourne நகரில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிப்போர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சேதவிபரங்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
புதியது பழையவை