இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2021 ஏப்ரல் முதலாம் திகதி முதல், 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், உரிய திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2021 ஒக்டோபர் முதலாம் ஆம் திகதி முதல் 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், உரிய திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
