டொனால்ட் ட்ரம்பின் உயிரை காப்பாற்றிய -'ரெகன் கோப்' கொவிட் மருந்தை இலங்கைக்கும் வழங்க அனுமதி


இலங்கைக்கு கொவிட் நோயாளிகளுக்கு வழங்கப்படும் 'ரெகன் கோவ்' என்ற மருந்தை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு மருந்துகளின் கலவையான ரெகன் கோவ் வழங்குவதன் மூலம் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதனை ஏற்றுக் கொண்டு உலகின் பல நாடுகள் அந்த மருத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இந்த மருத்தை வழங்குவதன் மூலம் உயிர் ஆபத்துக்களை 81 வீதம் குறைக்க முடியும் என பரிசோதனை மூலம் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.

நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த மருந்து மிகவும் தகுதியானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உட்பட நாடுகள் பலவற்றில் தற்போது வரையில் இந்த மருந்து வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ரெகன் கோவ் மருந்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு தடைகள் காணப்பட்டது. இந்த நிலையில் அதனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொவிட் தொற்றுக்குள்ளான போது பயன்படுத்திய ரெகன் கொவ் என்ற இந்த மருந்து தொடர்பில் முதல் முறையாக பேசப்பட்டது. ஆபத்தான நிலைமைக்கு சென்ற டொனால் ட்ரம்ப் இந்த மருந்தின் மூலம் குணமடைந்த பின்னர் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை