மது பிரியர்களுக்கு - வெளியிட்ட நற்செய்தி

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக அரசாங்கம் வருமானத்தை இழக்காதிருக்க, மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்வதற்கு விரைவில் இலங்கை மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கவுள்ளது.

கோவிட் ஊரடங்கு காலத்தில் மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான பொறிமுறை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.குணசிறி விடுத்துள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக மதுபானசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடுபவர்களை சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போவதாகவும், இதனால் புதிதாக கொரோனா கொத்தணிகள் ஊருவாகுவதற்கான வாய்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கறுப்பு சந்தைகளில் சாராயத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அவர், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதும் சிரமமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை