மட்டுப்படுத்தப்பட்ட தபால் சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம்

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அனைத்து தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களையும் நான்கு நாட்களுக்கு மாத்திரம் திறந்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் மாத்திரம் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களையும் திறப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் முதியோருக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்கு காலப்பகுதியில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகுதல் ஆகிய காரணங்களினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை