யுத்தத்தின் வடுக்களுடன் வாழும் எம்மவரின் கதையே “ஆறாம் நிலம்” இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகிறது

ஐ.பி.சி தமிழின் தயாரிப்பில் உருவான “ஆறாம் நிலம்” முழு நீளத் திரைப்படம் இன்று ஐ.பி.சி தமிழின் யூரியூப் தளத்தில் (https://www.youtube.com/c/IBCTamil) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு இரவு 07 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கும் இந்தத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டியில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணனின் இயக்கத்தில் முழுநீளத் திரைப்படமாக ஆறாம் நிலம் உருவாக்கப்பட்டுள்ளது.


போர்க்காலத்தில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியதாக இதன் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை