ஊரடங்குக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் தபாலகங்கள் ஊடாக ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்த ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் அலுவலகங்கள் இன்று (01) திறக்கப்பட்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்தின் கீழுள்ள சகல தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களிலும் இன்று (01) ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டதுடன், நோயாளர்களுக்கான வைத்தியசாலை கிளினிக் மருந்துப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டதாகப் பிரதம தபால் அதிபர் எஸ்.சுகுமார் தெரிவித்துள்ளார்.