சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அண்மையில் நோர்வே நாடாளுமன்றிற்கு தெரிவான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கம்சீ குணரட்னம் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக தாம் குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை போதுமானதல்ல. சர்வதேச நீதி விசாரணை அவசியம்.
சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிக்கும் வரையில் காத்திருக்காது இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையை புறக்கணிக்கக்கூடாது. இலங்கையில் முதலீடு செய்யப்பட வேண்டும். இலங்கையில் முதலீடுகளை செய்து தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
