இலங்கை பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல் கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.
இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
புதிய தரப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முதல் இடத்த பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.