மட்டக்களப்பு கொத்துக்குளத்து மாரியமன் ஆலயத்திற்க்கு முன்னால் வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (31) இரவு ஆலய காவலாளி மடக்கிபிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த ஆலையத்தின் முன்னால் திருப்பெருந்துறை வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலய உண்டியலை சம்பவதினமான நேற்று இரவு 10.30 மணியளவில் உடைக்கும் சத்தம் கேட்டு ஆலயத்தில் காவலுக்கிருந்த காவலாளி வீதிக்கு வந்தபோது உண்டியலை உடைக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்து காவற்துறையினரை வரவழைத்து ஒப்படைத்தனர்.