குருநாகல் மாவட்டம், மஹவ கடவலே பகுதியில் சட்டவிரோதமாகக் காணப்பட்ட மின்கம்பி ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.