மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களப்பு நிரப்பப்படுவது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள குளங்களில் இருந்து வெட்டப்படுகின்ற மண்ணைப் பயன்படுத்தி, அங்குள்ள களப்பு நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பபடுவது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களப்பு நிரப்பப்படும் நடவடிக்கை துரிதமாக இடம்பெறுவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், கொவிட் தொற்று சூழ்நிலை காரணமாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் பிரதேச அலுவலகங்கள் ஊடாக முறையான சேவை இடம்பெறாமையினால், குறைந்தபட்ச ஊழியர்களையாவது இணைத்துக்கொண்டு உடனடியாக குறித்த அலுவலகத்தின் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

புதியது பழையவை