மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பட்டிருப்பு பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர்களின் வலையில் மோட்டார் குண்டு ஒன்று சிக்கியுள்ளது.
இவ்விடயம் குறித்து மீனவர்கள் உடனடியாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன மற்றும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட குழுவினர் குண்டைப் பார்வையிட்டனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் இக்குண்டு செயலிழக்கச் செய்வதற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணை முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
