உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களாக பெயரிடப்பட்ட தீவுகளில் இலங்கையும் தெரிவு

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களாக பெயரிடப்பட்ட 25 தீவுகளில் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி சஞ்சிகையான Travel Plus Leisure சஞ்சிகையின் செப்டம்பர் மாத வெளியீட்டின் மூலம் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பட்டியலில் இலங்கை மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் 24 ஆவது இடத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி முதல் மே 11 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் குறித்த 25 நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக travel plus leisure சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் உலகின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் இந்த வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்த சஞ்சிகை கூறியுள்ளது.

இதேவேளை இந்த பட்டியலில் கிரேக்க தீவான மிலோஸ் தீவு முதலிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை