உதயகுமார் கல்வி நிலையத்தினால் பாடசாலைக்கு பாதுகாப்பு CCTV கமராக்கள் வழங்கி வைக்கப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு (பட்டிப்பளை)ஆகிய பகுதியில் இயங்கிவரும் கல்வி நிலையமாகும்.

 "வளர்ச்சியின் உச்சநிலை கல்வி"எனும் நோக்கோடு இன்றைய தினம்(20/09/2021) மட்/மமே/முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பாடசாலை நிருவாகம், பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க உதயகுமார் கல்வி நிலையத்தினால் பாடசாலைக்கு100000(ஒரு லட்சம்)பெறுமதியான பாதுகாப்பு CCTV கமராக்கள் உதயகுமார் ரஞ்சினி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. 

நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

 உதயகுமார் கல்வி     நிலையத்தின் ஸ்தாபகர்    திரு.ந.உதயகுமார்,செயலாளர் திரு.ம.ஜெயக்கொடி இணைப்பாளர் லக்ஷனா,உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி உதயகுமார் ரஞ்சினி,ஆசிரியர்கள்,கிராமத்தின் சமுகமட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.


புதியது பழையவை