மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கினை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிபதி தீர்மானித்துள்ளார்.
இன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாத காரணத்தால் இணைய வழியூடாக வழக்கு நடைபெற்றது.

