பெற்றோல்,டீசல் விலை அதிகரிக்குமா? 12ஆம் திகதி அறிவிப்பு

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருகின்ற நவம்பர் 12ஆம் திகதி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.

இதன்போது எரிபொருள் விலையேற்றம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை