இலங்கை தமிழ் அரசு கட்சியுன் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 3000 பனை விதைகள் நடுவோம் இயற்கை வளம் காப்போம் எனும் பனை விதைகள் நடும் திட்டம் இன்றைய தினம்(09) மட்டக்களப்பு பாலமீன் மடு மற்றும் போரதீவு பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாவெளி , பொறுகாமம்,கோவில்போரதீவு கிராமங்களில் காணப்படும் குளங்களின் அணைக்கட்டின் ஓரங்களில் பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது.
இன் நிகழ்வில் எமது இளம் துடிப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இரா.சாணக்கியன், மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் போரதீவு பற்று பிரதேச சபை வட்டார தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் மற்றும் வாலிபர் முன்னணி தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசுக் கட்சியுன் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசு கட்சியுன் பட்டிருப்பு தொகுதியின் மகளீர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமம் சார் கமநல அமைப்பின் உறுப்பினர்கள்,வட்டவிதானைமார், கிராமம் சார் ஆலயங்களின் தலைமையில் அறங்காவலர் சபையினர்(வண்ணக்குமார்) , கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம பெரியார்கள், கட்சி சார்பான ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பனை விதைகள் நடுகை செய்யும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.






